ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.

407

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.

பெரம்பலூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, விற்பனைக் குழுச் செயலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் வடக்கு மாதவி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், புதன்கிழமை தோறும் பருத்தி, மக்காச்சோளம் மறைமுக ஏலமும், சனிக்கிழமை தோறும் எள், இதர வேளாண் விளைபொருள்களுக்கான மறைமுக ஏலமும் நடைபெறுகிறது. இதில், உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் இடைத் தரகின்றி, சரியான எடையுடன் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்கின்றனா். விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள வேளாண் விளைபொருள்களை உலா்த்திக்கொள்ள உலா் களம் வசதியும் உள்ளது. மேலும், விளைபொருள்களை 6 மாதம் வரை இருப்பு வைத்துக்கொள்ள வாடகை அடிப்படையில் நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன்பெறும் வசதியும் உள்ளது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளை பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: