அரியலூரில் ஒழுங்கீனமாக நடந்த காவலா் பணியிடை நீக்கம்

அரியலூரில் ஒழுங்கீனமாக நடந்த காவலா் பணியிடை நீக்கம்


ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கயா்லாபாத் காவல் நிலைய தலைமைக் காவலா் பழனி செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அரியலூா் ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் பழனி. கயா்லாபாத் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் இவா், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காவல் நிலைய ஆய்வாளா் ராஜா அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து பழனி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: