கோவில்பாளையத்தில் ஒரே திருவிழாவில் 3 தேர்கள் இழுத்து வரப்படும் வினோதம்.

கோவில்பாளையத்தில் ஒரே திருவிழாவில் 3 தேர்கள் இழுத்து வரப்படும் வினோதம்.


பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்பாளையம் கிராமத்தில் சித்திரை மாதத்தில் நடத்தப்படும் ஒரே திருவிழாவில் 3 தேர்கள் இழுத்து வரப்படும் வினோதம் நேற்று வெகு விமரிசை யாக நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வேப்பூர் அருகே துங்கபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் கிளைக் கிராமங்களான கோவில்பா ளையம் மற்றும் தேனூர் ஆகிய இரண்டு கிராமங்கள் அருகருகே ஒட்டியபடி உள்ளன.

குறிப்பாக அரியலூர்-திட்டக்குடி சாலைதான் இந்தக் கிராமங்களின் மையக்கோடாக உள்ளது. இந்த இரு கிராமங்களின் அருகேஅய்யனார், கருப்புசாமி, மாரியம்மன், செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரைத் திருவிழாவை கோவில்பாளையம் மற்றும் தேனூர் ஆகிய இரண்டு கிராமத்தி னரும் சேர்ந்தே நடத்தி வருகின்றனர்.

நடப்பாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஆறாம் தேதி திங்கட்கிழமை பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுத லுடன் தொடங்கியது. இதனையடுத்து தினமும் சுவாமி திருவீதி உலா நடந்து வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோவில்பாளையம் மெயின்ரோடு பகுதி யிலிருந்து நேற்றுகாலை தொடங்கியது. இதில் வித்தியாசமாக பெரம்பலூர் மாவட்டத்தில் வேறு எந்த ஊராட்சியிலும் இல்லாதபடிக்கு செல்லி யம்மனுக்கு ஒரு தேரும், மாரியம்மனுக்கு ஒரு தேரும், அய்யனார் மற்றும் கருப்புசாமி தெய்வங்களுக்கு மற்றொரு தேரும் என மூன்று தேர்கள் இழுத்து வரப்பட்டன.

காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேரோட்டம் அரியலூர் திட்டக்குடி சாலையைக் கடந்து தேனூர் கிராமத்திற்குச் சென்று, மீண்டும் கோவில்பாளை யம் சிவன் கோவில் அருகே வந்து மதி யம் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்குத் தொடங்கிய தேரோட்டம் 6.30 மணியளவில் மெயின்ரோடு பகுதிக்கு வந்து தேரோட்டம் நிறைவடைந்தது.

இந்தத் தேரோட்டத்தில் கோவில்பாளையம் தேனூர் கிராமப் பொதுமக்கள் மட்டுமன்றி, துங்கபுரம், காடூர், புதுவேட்டக்குடி, நமங்குணம், பழமலை நாதபுரம், என். குடிக்காடு, குன்னம், வேப்பூர், பெரியவெண்மணி மருதையாங்கோவில், உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்பாளையம் தேனூர் கிராம முக்கியஸ்தர்கள் இணைந்து செய்திரு ந்தனர்.

மேலும் மாவட்ட செய்திகளை வாசிக்க – பெரம்பலூர் மாவட்டம்

தினகரன்

308total visits,11visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: