ஒமானில் ஆகஸ்ட் 8 முதல் கொரோனா ஊரடங்கு தளர்வு..!
Oman News: Curfew relaxed in Oman from August 8.
ஒமானின் தோஃபார் மாகாணத்தை தவிற மற்ற இடங்களில் ஆகஸ்ட் 8 முதல் ஊரடங்கில் தளர்வு செய்ய உள்ளதாக சுப்ரீம் கமிட்டி தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரையிலும் தோஃபார் மாகாணத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது போன்றே ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
உலகத்தை மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா நோய்தொற்றால் ஓமானிலும் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. நோய் பரவலை தடுக்கும் விதமாக ஈதுல் அத்ஹா விடுமுறை தினங்களில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஜூலை மாதம் 25 ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி சனிக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு சம்பந்தமான செய்தியை சுப்ரீம் கமிட்டி அறிவித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, தற்பொழுது நடைமுறையில் இருக்கும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கின் நேரத்தை வரும் 8-ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Keyword: Oman News
You must log in to post a comment.