ஒடிசா முதல்வர் தமது ஒரு வருட சம்பளத்தை புயல் நிவாரணத்திற்கு வளங்கினார்!

Hits: 0

ஒடிசா முதல்வர் தமது ஒரு வருட சம்பளத்தை புயல் நிவாரணத்திற்கு வளங்கினார்!


ஃபானி புயலினால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு அம்மாநிலத்தின் முதல்வர் நவின் பட்நாயக் அவர்கள் தமது ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஃபானி புயலான கடைசியாக ஒடிசாவிற்கு சென்று தமது கோர முகத்தை காட்டி ஓய்ந்தது. ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். மிகப்பெரும் சேதங்களுகம் ஏற்பட்டது.

முன்னதாக புயலால் பாதிப்படைந்த ஒடிசாவிற்கு ரூ.341 கோடியை மத்திய அரசு அறிவித்திருந்தது, பிரதமர் பார்வையிட்ட பின்னர் கூடுதலாக ரூ.1000 கோடியை அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அதிகாரிகளுடன், மத்திய அமைச்சரவைச் செயலாளர் பிகே சின்ஹா ஆலோசணை நடத்தினார்.

பின்னர் பேசிய அவர், ஒடிசாவை மீட்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அங்கு குடிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. மின்சாரம் இணைப்புகளை கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை என்று கூறினார்.

இந்தியாவின் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒடிசாவிற்காக தங்களது நிவாராண நிதிகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ஒரு வருட சம்பளத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.

புபனேஷ்வர் மற்றும் பூரி ஆகிய பகுதிகளில் மிகுந்த சேதம் அடைந்துள்ளதால், அந்த இடங்களில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர்  நவின் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.




Leave a Reply