ஐபிஎல் ஆட்டத்தின் பைனலுக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது!

Hits: 0

ஐபிஎல் ஆட்டத்தின் பைனலுக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது!


வரும் 12-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. ஆன்லைனில் இந்த முறை ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 மற்றும் ரூ.5,000 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் வெறும் இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன. இதனால், பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Leave a Reply

%d bloggers like this: