நாளை சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை!

நாளை சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை!


ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை தொடங்குகிறது. 

பனிரெண்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி. இப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் 23 ஆம் தேதி முதல் போட்டி நடைபெற இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இரவு 8 மணிக்கு மோதுகிறது. இந்த தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை காலை 11 : 30 மணிக்கு டிக்கெட்டுகள் கிடைக்கும்.

www.chennaisuperkings.com  மற்றும் in.bookmyshow.com தளத்திலும் டிக்கெட் விற்பனை ஆரம்பம் ஆகும். சென்னை போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூபாய் 1300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச விலையிலான டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் மட்டுமே விற்கப்படும்.

ரூபாய் 2500, ரூபாய் 5 ஆயிரம், ரூபாய் 1500 ஆகியவைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: