பெரம்பலூர் மக்களவை தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் இறுதி கட்ட பிரசாரம்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் இறுதி கட்ட பிரசாரம்.


தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் பெரம்பலூர் மக்களவை தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரி்வேந்தர் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தொட்டியம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் உதயசூரி–்யன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் மக்களவை தொகுதியை தமிழகத்தின் முன் மாதிரி் தொகுதியாக மாற்றும் வகையில் சிறப்பான பணியை மேற்கொள்வேன். பெரம்பலூர் எம்பி தொகுதியில் வாழும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், படித்த இளைஞர்கள், குடும்ப தலைவிகள், இளம்பெண்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையிலும், வருங்கால சந்ததியினர் கல்வியில் சிறந்து விளங்கி அரசின் பல்துறைகளிலும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பணியாற்றுவேன்.

நாடளுமன்றத்தில் இப்பகுதியின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் பெற்று வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவேன். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம்  பெறவும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்தும், வேலைவாய்ப்பிற்க்கான தொழிற்சாலைகளை இப்பகுதிக்கு கொண்டு வரவும் பாடுபடுவேன் என்றார். பிரசாரத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், நகர செயலாளர் நிர்மலா சந்திரசேகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தினகரன்

217total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: