ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள்  ஈதுல் அத்ஹா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள்  ஈதுல் அத்ஹா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஈதுல் அத்ஹா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கலீஃபா அவர்கள்  வளைகுடா நாடுகளின் மன்னர்களுக்கும் தலைவர்களுக்கும்  ஈதுல் அத்ஹா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் அரபு நாடுகளின் மன்னர்களும் தலைவர்களும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியும் பெற்று வாழ வாழ்த்தியுள்ளார்.  அரபு நாடுகளும் அதன் மக்களும்  எல்லா வளமும் நலமும் பெற்று முன்னேற்றமடைய வாழ்த்தியுள்ளார்.

அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களும் வாழ்த்துச் செய்தி  அரபு நாடுகளின்  மன்னர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், அஜ்மான் ஆட்சியாளர் சேக் ஹுமைது பின் ராஷித் அல் நுவைமி அவர்கள், புஜைராவின் ஆட்சியாளர் சேக் ஹமாத் பின் முஹம்மது அல் சார்க்கி அவர்கள்,  உம் அல் குவைன் மாநில ஆட்சியாளர் சேக் சவுத் பின் ராஷித் அல் முஅல்லா அவர்கள் மற்றும் ராஸ் அல் கைமா மாநில ஆட்சியாளர் சேக் சவுத் பின் சாக்ர் அல் காசிமி ஆகியோர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கும்  ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய நல்ல வாழ்வைத் தர அல்லாஹ்விடம் வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தின் இளவரசர்கள் துணை ஆட்சியாளர்களும்  தங்களது  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

-வளைகுடா தமிழன்.


வளைகுடா செய்திகளுக்கு…
 
Leave a Reply

%d bloggers like this: