அரியலூரில் நவீன வசதியுடன் ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு

அரியலூரில் நவீன வசதியுடன் ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு


அரியலூர் பட்டுநூல்கார தெருவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த டாக்டர் அப்துல் சாதிக் ஏ.எஸ்.மருத்துவமனையை திறந்தார். நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. ஏ.எஸ். குழும நிறுவனர் டாக்டர் சுசீல் அப்துல் சாதிக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கொடைக்கானல் அப்துல் ரஹீம், பாலக்காடு வழக்கறிஞர் ஜலீல், டாக்டர்கள் அனீஸ் பாத்திமா, ரோஸ்னா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

டாக்டர்கள் ராஜாஷரிப், மதன்குமார், பிரவீன், எழில்நிலவன், கண்மணி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் டாக்டர்கள் அகமது ரவி, ரியாஸ் வரவேற்றனர்.

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: