டிக்டாக் விபரீதம்: ஏரியில் விழுந்து வாலிபர் பலி.

டிக்டாக் விபரீதம்: ஏரியில் விழுந்து வாலிபர் பலி.ஏரியின் பகுதியில் நின்று கொண்டு டிக்டாக் வீடியோ பாடலுக்கு ஆடியபோது ஏரியில் விழுந்து உயிரிழந்துள்ளார் ஒரு இளைஞர்.

இந்தச் சம்பம் தெலுங்கானாவில் புதன்கிழமை மாலை மேட்சல் மாவட்ட துலப்பள்ளி ஏரியில் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

பலியானவர் பெயர் நரசிம்மன் என்று கண்டறியப்பட்டுள்ளது. நரசிம்மன் மற்றும் அவருடைய நண்பர் பிரசாந்த் ஆகியோர் ஏரியில் நின்று டிக்டாக் பாடலுக்கு ஆட்டம் ஆடி வீடியோ எடுத்துள்ளனர். பிறகு தனியாக நரசிம்மன் ஆடுவதைத் தூரத்திலிருந்து பிரசாந்த் வீடியோ எடுத்துள்ளார்.

அந்தச் சமயத்தில் ஆழமான பகுதிக்குள் தெரியாமல் சென்றுவிட்ட நரசிம்மன் நீச்சல் தெரியாமல் உயிரிழந்துள்ளார். இவ்வாறு துறையினர் தெரிவித்தனர். வியாழக்கிழமை நரசிம்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அப்பகுதி காவல் துறையினர் தெரிவித்தனர்.

டிக்டாக் மோகத்தால் உயிர் பறிபோனது. விளையாட்டு விபரீதமாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

GN190712


Leave a Reply

%d bloggers like this: