ஏடிஎம் ஹேக் செய்யும் ஸ்கிம்மர் சாதனங்களைப் பயன்படுத்தியவர்கள் கைது.

ஏடிஎம் ஹேக் செய்யும் ஸ்கிம்மர் சாதனங்களைப் பயன்படுத்தியவர்கள் கைது.

ஏடிஎம் மெஷினில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் எடுக்கும் போது அதன் விவரங்களைத் திருடப் பயன்படும் ஏடிஎம் ஸ்கிம்மர் பயன்படுத்தியவர்களைச் சென்னை காவல்துறை கைது செய்துள்ளனர். இந்த நூதன மோசடியில் 3 பேர் ஈடுபட்டிருந்த இவர்கள் பல்கேரிய நாட்டைச் சார்ந்தவர்களாவர்.

இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த தகவலின் படி இவர்களைச் சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் பெயர்கள் லுபோமிர் மக்ஸிமோவ் (33), நிக்கோலாய் கட்டேவ் (30) மற்றும் போரிஸ் வல்கோவ் (30). இவர்கள் மூவரும் ஜூலை 13 ஆம் தேதி சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இந்த மூவரில் ஒருவர் ஹோட்டல் ரிஷப்ஷனில் தொடர்பு கொண்டு, தனது அறையிலுள்ள லாக்ககரின் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதால் அதைத் திறக்கு உதவி கோரியுள்ளார். அதனடிப்படையில் லாக்கரை திறப்பதற்கு டெக்னீசியன் அனுப்பி லாக்கரும் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட லாக்கரில் இந்திய ரூபாய் மிக அதிகமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற டெக்னீசியன் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையறிந்த ஹோட்டல் ஊழியர்கள் அவர்களின் அறையைச் சோதனை செய்துள்ளனர். அப்போது பணத்துடன் எடிஎம் ஸ்கிம்மர் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளனர். உடனே கண்ணகி நகர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். காவல் துறையினரும் தங்கியிருப்பவர்களுக்குச் சந்தேகம் வராத வகையில் நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அந்த மூன்று பேரும் ஹோட்டலுக்கு வந்தததும்ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விசாரணையில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை போலியாக உருவாக்கி பணத்தை எடுக்கத் திட்டமிட்டு செயல்பட்டதாகத் தெரிவித்தனர். மூவரும் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏழரை லட்சம் இந்திய ரூபாய், பதிமூன்றாயிரம் அமெரிக்க டாலர்கள், லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

கடந்த மே மாதத்தில்கூட சென்னையில் ஓ.எம்.ஆர்-ல் இவர்களைப் போலவே கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை போலியாகத் தயாரித்த குற்றத்திற்காக இரண்டு பல்கேரியர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

%d bloggers like this: