எரி பொருள் விலை உயர்வை கண்டித்து

எரி பொருள் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

401

எரி பொருள் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க.வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க.வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறக் கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், மகளிரணியினரும், தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய தலைவர்களும், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 1 லிட்டர் பெட்ரோல் பொதுமக்களுக்கு ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் தேர்தல் பரப்புரை பாடல் வெளியீடு செய்யப்பட்டு, பெரியார் சிலையில் இருந்து ரோவர் வளைவு வரை சைக்கிள் பயணம் நடைபெற்றது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், எரி பொருள்
%d bloggers like this: