12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை!

551

[the_ad id=”7332″]

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை!

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 14

பணி : ஒருங்கிணைப்பாளர்

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:-

கிருஷ்ணகிரி – 01

சேலம் – 02

அரியலூர் – 01

தஞ்சாவூர் – 02

சென்னை – 03

தருமபுரி – 01

திருச்சி – 01

நாகப்பட்டினம் – 01

மதுரை – 02

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnsacs.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து காலியிடங்கள் உள்ள மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.07.2019


[the_ad id=”7250″]


[the_ad id=”7252″]
%d bloggers like this: