பெரம்பலூரில் வாக்களித்த எம்பி, எம்எல்ஏ, வேட்பாளர்கள்

பெரம்பலூரில் வாக்களித்த எம்பி, எம்எல்ஏ, வேட்பாளர்கள்


மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வியாழக்கிழமை வாக்களித்தனர்.

பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி ஆகியோர் வாக்களித்தனர்.

இதேபோல, திமுக கொள்கைப் பரப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா, தனது சொந்த கிராமமான வேலூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். மருதராஜா தனது சொந்த கிராமமான ரெங்கநாதபுரத்தில் உள்ள திரவியம் சகாய மானிய தொடக்கப் பள்ளியிலும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, தனது சொந்த கிராமமான வேப்பூர் ஒன்றியத்துக்குள்பட்ட பெருமத்தூரில் உள்ள டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியிலும், குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் தனது சொந்த கிராமமான அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் இளவரசன் துறைமங்கலம் டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியிலும், பெரம்பலூர் மக்களவை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இரா. முத்துலட்சுமி பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

181total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: