புதிய செய்தி :

எச்சரிக்கை “this video is yours”

எச்சரிக்கை “this video is yours”

எச்சரிக்கை – உங்கள் Inbox இல் உங்கள் நண்பர் அனுப்பியது போல ஒரு செய்தி “this video is yours” என்றவாறு உங்கள் படத்துடன் உள்ளதா?

அதை எந்த காரணம் கொண்டும் Click செய்யவேண்டாம்.

இது உங்கள் கணக்கு Login விபரத்தை களவாடும் முயற்சி. எப்படி அவர்கள் இதை களவாடுகின்றார்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் அந்த செய்தியில் Click செய்யும் போது அங்கே எந்த வீடியோவும் இருக்காது. அந்த வீடியோவை பார்க்க வேண்டுமெனில் நீங்கள் Login செய்யவேண்டும் என கூறுவார்கள், லாகின் செய்வதற்குரிய இணைப்பில் நீங்கள் Click செய்தால் அது Facebook போலவே இருக்கும் இன்னுமொரு பொய்யான தளத்துக்கு உங்களை கூட்டி செல்லும்.

அந்த பொய்யான இணையத்தில் நீங்கள் உங்கள் Facebook username மற்றும் password கொடுக்கும் போது அவர்கள் அதை கைப்பெற்றி உங்கள் கணக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

அதன் பின்னர் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவது போன்று இதே செய்தி அனுப்பபடும்.

நீங்கள் இவ்வாறு அந்த செய்தியில் கிளிக் செய்து மேற்கூறியவாறு உங்கள் Facebook Login விபரத்தை வழங்கி இருந்தால் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் Password மாற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

இந்த மாதிரியாக வரும் செய்திகளை Click பண்ணாமல் இருப்பதே இதற்குரிய ஒரே ஒரு பாதுகாப்பு பொறிமுறை.

இதனை Credential Hijacking or Phishing என்று அழைப்பர்!

எந்தவொரு link messenger ல் உங்களது நண்பர்களோ அல்லது வேறு எவராவது அனுப்பினால் open செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

நன்றி – tamilcnn
Leave a Reply