எசனை ஏரிக்குள் குப்பைகள் கொட்டுவது தடுக்க வேண்டும்.

எசனை ஏரிக்குள் குப்பைகள் கொட்டுவது தடுக்க வேண்டும்.


பெரம்பலூர் அருகேயுள்ள எசனை ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால்களில் சுத் தப்படுத்த அள்ளப்படும் குப்பைகள், தெருக்களில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் பெரம்பலூர் ஆத்தூர்சாலையிலுள்ள பெரிய ஏரியில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் கோடைமழை பெய்து ஏரிநிரம்பினால், கொட்டப்பட்ட கழிவுகள் கரைந்து ஏரி நீரை மாசுபடுத்தும். குன்றுகளைப்போல் கொட்டப்படும் குப்பைகளில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பைகள், டப்பாக்கள், மருந்துகழிவுகள் ஏராளம் உள்ளன.

இதனால் குப்பை கொட்டுவதைத் தடுத்துநிறுத்த சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சியின் குப்பைகளைக் கொட்டுவதற்கென தனியாக இடம் தேர்வு செய்து அதில் மக்கும்குப்பை, மக்கா குப்பை என பிரித்து சேமிக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என சமூகஆர்வலர்கள், விவசாயி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினகரன்

66total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: