எங்கள் மாவட்டம் பற்றி (Perambalur District)
பெரம்பலூர் மாவட்டம் (Perambalur District) பற்றிய விபரம்.
பெரம்பலூர் மாவட்டம் (Perambalur District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ பரப்பளவுடையது. பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம், நவம்பர் 23, 2007 இல் நிறுவப்பட்டது.
இம்மாவட்டத்தின் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆகியவைகளை எல்லைகளாகக் கொண்டது.
[the_ad id=”7250″]
1,756 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 5,65,223 ஆகும். அதில் ஆண்கள் 282,157 மற்றும் பெண்கள் 283,066 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 10.54% ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.32% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 82.87% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.90% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 33.27% ஆக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 5,21,658 (92.29%) ஆகவும்; இசுலாமியர்கள் 32,702 (5.79 %) ஆகவும்; கிறித்தவர்கள் 10,301 (1.82 %) ஆகவும்; மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர்.
இம்மாவட்ட மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. குன்னம் மற்றும் வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் செங்கற்கள் அதிகம் தயாரிக்கப்படுகிறது.
- ஜவஹர்லால் நேரு பெரம்பலூர் சர்க்கரை ஆலை - எறையூர்
- மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி – மதராஸ் ரப்பர் தொழிலகம் நாரணமங்கலம்.
- தனலெட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை - உடும்பியம்.
சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது.
இம்மாவட்டப் பகுதிகள் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)(தனி) மற்றும் குன்னம் (சட்டமன்றத் தொகுதி) என இரண்டு சட்டமன்றத் தொகுதிகலும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியும் உள்ளது.
இம்மாவட்டம் 1 வருவாய் கோட்டம், 4 வருவாய் வட்டங்கள், 11 உள் வட்டங்கள் மற்றும் 152 வருவாய் கிராமங்கள் கொண்டது.
[the_ad id=”7251″]
வருவாய் வட்டங்கள்
- பெரம்பலூர் வட்டம்
- ஆலாத்தூர் வட்டம்
- குன்னம் வட்டம்
- வேப்பந்தட்டை வட்டம்
உள் வட்டங்கள்
- வடக்கலூர்
- கீழபுலியூர்
- வரகூர்
- பெரம்பலூர
- குரும்பலூர்
- வெங்கலம்
- பசும்பலூர்
- வாலிகண்டபுரம்
- செட்டிகுளம்
- கொளக்காநத்தம்
- கூத்தூர்
இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 4 பேரூராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியகளும், 121 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
- பெரம்பலூர்
பேரூராட்சிகள்
- அரும்பாவூர்
- இலப்பைகுடிக்காடு
- குரும்பலூர்
- பூலாம்பாடி
ஊராட்சி ஒன்றியங்கள்
- ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- பெரம்பலூர்
- வேப்பந்தட்டை
- வேப்பூர்
பெரம்பலூர் மாவட்ட காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் பெரம்பலூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது பெரம்பலூர் மாவட்டம் முழுமையிலும் தன் செயல் எல்லையைக் கொண்டுள்ளது.
இலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றொன்று கிருஷ்ணபுரத்திலும் உள்ளது.
[the_ad id=”7252″]
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் 5, பொறியியல் கல்லூரிகள் 8, மருத்துவ கல்லூரிகள் 1, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 20, செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் 7, வேளாண்மைக் கல்லூரிகள் 1,கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் 3 மற்றும் தொடக்க பள்ளிகள் 209, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர் நிலைப்பள்ளிகள் 49, மேல்நிலைப்பள்ளிகள் 40 CBSE மற்றும் சிறப்பு பள்ளிகள் உட்பட இருக்கின்றன.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள்
- சாத்தனூர் கல்மரம்
- இரஞ்சன்குடிகோட்டை
- விசுவக்குடி நீர்த்தேக்கம்
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில்
- செட்டிக்குளம் பாலதண்டாயுதபானி திருக்கோவில்
ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக ஆற்காடு நவாப் வழி வந்த ஜாகிர்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(தோஸ்த் அலி கான் உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும் (சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம் ஆகும்.
[the_ad id=”7252″]
மாவட்டத்திலுள்ள ஏரிகள்
- ஓலைப்பாடி பெரிய ஏரி
- துறைமங்கலம் பெரிய ஏரி
- பெரம்பலூர் பெரிய ஏரி
- துறைமங்கலம் சித்தேரி
- வெண்பாவூர் ஏரி
- வடக்கலூர் ஏரி
- கீரவாடி ஏரி
- லாடபுரம் பெரிய ஏரி
- குரும்பலூர் ஏரி
- லாடபுரம் பெரிய ஏரி
- ஆய்க்குடி பெரிய ஏரி
- எசனை பெரிய ஏரி
- அரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி
- பூலாம்பாடி 3 ஏரிகள்
- பெரியம்மா பாளையம் ஏரி
- வெங்கனூர் ஏரி
மாவட்டத்திலுள்ள ஆறுகள்
- கல்லாறு
- சுவேதா ஆறு
- வெள்ளாறு (வடக்கு)
- சின்னாறு – பெரம்பலூர் மாவட்டம்
மாவட்டத்திலுள்ள அருவிகள்
- மயிலூற்று அருவி
- ஆனைக்கட்டி அருவி
- கோரையாறு அருவி
- வெண்புறா அருவி
- எட்டெருமை அருவி
மாவட்டத்திலுள்ள அணைகள்
- சின்னாறு அணை – பெரம்பலூர் மாவட்டம்
- விசுவக்குடி அணை
தகவல்கள் விக்கிபீடியா
[the_ad id=”7252″]