எங்களைப் பற்றி
எங்களைப் பற்றி
கல்லாறு வாசகர்களுக்கு.
கல்லாறு என்ற கிளையாறு வி.களத்தூரில் ஓடினாலும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்தது எமது கல்லாறு.காம் என்பதில் பெறுமை கொள்கிறோம்.
எமது இந்த இணையதளத்தில் பெரம்லூர் மாவட்டத்தின் சிறப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை விபரங்கள், மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் மற்றும் தினசரி செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம்.
நமது மாவட்டத்தில் உள்ள திறமையானவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்த எமது கல்லாறு ஒரு இணைப்பு பாலமாக செயல்பட காத்திருக்கிறது. உங்கள் ஆக்கங்கள் எழுத்தாகவோ, நடிப்பாகவோ, வீடியோ வடிவமைப்பாகவோ, புகைப்பட தொகுப்பாகவோ எப்படி இருந்தாலும் எங்களிடம் வாருங்கள் வாய்ப்புகள் தர நாங்கள் ரெடி..
நமது மாவட்ட கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்கள், பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் அனைத்தையும் எங்களுக்கு தெரியப் படுத்தலாம். அதையும் நமது இணைய தளத்தில் பதிவு செய்து மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.
உங்களுடைய ஆக்கங்கள், புகைப்படங்கள் அனைத்து எங்கள் வெப்சைட்டில் அப்டேட் செய்து உங்கள் திறமைக்கு வாய்ப்புகள் தருகிறோம்.
தெரிந்த நல் விசயங்களை தெரிவிப்போம்.
அன்புடன்
கல்லாறு மீடியா.