ஊரடங்கை மீறிய

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்.

507

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நேற்றைய தினம் பெரம்பலூர் சாலைகளில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 71 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 70 இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மங்களமேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் அயன்பேரையூர் பிரிவு பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாஷ் தலைமையில் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 50 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: