ஊரடங்கு விதிகளை மீறிய 417 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு விதிகளை மீறிய 417 வாகனங்கள் பறிமுதல்.

445

ஊரடங்கு விதிகளை மீறிய 417 வாகனங்கள் பறிமுதல்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 417 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை வாகன சோதனை செய்து பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கடந்த 18-ந்தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 5-வது நாளாக நேற்று மாவட்டத்தில் சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 96 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 92 இருசக்கர வாகனங்களும், மூன்று சக்கர வாகனம் ஒன்றும், 3 நான்கு சக்கர வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 411 இருசக்கர வாகனங்களும், 5 நான்கு சக்கர வாகனங்களும், மூன்று சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முககவசம் அணியாத 68 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.13 ஆயிரத்து 600-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரத்து 500-ம் அபராதமாக போலீசார் விதித்தனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: