ஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்!
கொரோனா நோய் தொற்று காரணமாக ஓமான் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும் தோஃபர் பகுதியில் மட்டும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும், வெளியில் இருந்து அப்பகுதிக்கு மக்கள் நுழையவும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் அக்டோபர் 1 முதல் தோஃபர் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் லாக்டவுன் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,
You must log in to post a comment.