ஊரடங்கு தளர்வில் கூட்டம்

ஊரடங்கு தளர்வில் பெரம்பலூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம்.

431

ஊரடங்கு தளர்வில் பெரம்பலூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம்.

பெரம்பலூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

கொரோனாவின் 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி முதல் வருகிற 31-ந் தேதி அதிகாலை 4 மணி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் நலன்கருதி நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகும், நேற்றும் அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறக்க அரசு ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகு குறைவான கடைகள் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால் பொருட்கள் வாங்க கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடினாலும், சென்னை செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. திருச்சி உள்ளிட்ட அருகே உள்ள மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. டவுன் பஸ்களில் கூட்டம் இருந்தது. அந்த பஸ்களில் கட்டணம் கிடையாததால் பெண்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. ஷேர் ஆட்டோக்களும் இயங்கின.

தினத்தந்தி

Our Facebook Page




%d bloggers like this: