ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 122 பேர் மீது வழக்கு

ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 122 பேர் மீது வழக்கு

324

ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 122 பேர் மீது வழக்கு

தடையை மீறி வெளியே சுற்றிய 122 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2 – வது கட்ட பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் முக கவசம், கிருமிநாசினி வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்று பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: