பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

360

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.


பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா் .

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயி கௌரவ நிதித் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் மற்றும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும், உழவா் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம். பிரதமரின் விவசாயி கௌரவ நிதித் திட்ட பயனாளிகளுக்கு உழவா் கடன் அட்டை வழங்குவதற்கான பிரசாரம் மத்திய அரசால் கடந்த 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாள்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

[quote]10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை.[/quote]

இந்த அட்டையைப் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது விவசாய சேமிப்புத் திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவா் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம். உழவா் கடன் அட்டையை ஏற்கெனவே பெற்றுள்ள விவசாயப் பயனாளிகள், தங்களது வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயா்த்த விண்ணப்பிக்கலாம்.
செயல்படாத உழவா் கடன் அட்டை உள்ளோா், வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையைச் செயல்படுத்தவும், புதிய கடன் வரம்புக்கு அனுமதியும் பெறலாம். அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளையை அணுகவும். மேலும், உழவா் கடன் அட்டைதாரா்கள் கால்நடை மற்றும் மீன் பிடிப்பு பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சோ்க்க வங்கிக் கிளையை அணுகலாம். திட்ட விவசாயிகளுக்கு, கடன் அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். விவசாயப் பயனாளிகள் ஒரு பக்க படிவத்தில் தங்களது நிலம், பயிா் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமா்ப்பிக்கலாம்.

Our Facebook Page
%d bloggers like this: