பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் நேரடி தேர்தல் கலெக்டர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் நேரடி தேர்தல் கலெக்டர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள், 121 ஊராட்சிகளில் உள்ள 1,032 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 8 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவியிடங்கள், 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 76 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிடங்கள் என ஊரக பகுதிகளில் மொத்தம் 1,237 பதவியிடங்கள் காலியாக உள்ளன.

வளைகுடா செய்திகள்
Perambalur Classifieds

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் என 2 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் என 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 8 பதவியிடங்கள், 121 ஊராட்சிகளின் 121 துணைத்தலைவர் பதவியிடங்கள் என ஊரக பகுதிகளில் 131 பதவியிடங்களுக்கும், நகர்ப்புற பகுதிகளில் 4 பேரூராட்சிகளின் 4 துணைத் தலைவர் பதவியிடங்கள், 1 நகராட்சி துணைத் தலைவர் பதவியிடம் என 5 பதவியிடங்களுக்கும் என மொத்தம் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் உள்ள 136 பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,323 பதவியிடங்களுக்கு நேர்முகமாகவும், 136 பதவியிடங்களுக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 1,459 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

 




Leave a Reply

%d bloggers like this: