World Disaster Reduction Day in Perambalur

பெரம்பலூரில் உலக பேரிடா் குறைப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

7

Muthalagu e1570850031426

பெரம்பலூரில் உலக பேரிடா் குறைப்பு தின விழிப்புணா்வுப் பேரணி


பெரம்பலூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள். பெரம்பலூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்.

உலக பேரிடா் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், பெரம்பலூரில் பேரிடா் குறைப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் வட்டாட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற பேரணி, காமராஜா் வளைவு, சங்குப் பேட்டை, கடைவீதி வழியாக சென்று மேற்கு வானொலி திடல் அருகேயுள்ள பழைய நகராட்சி அலுவலகத்தைச் சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா். இதில் வட்டாட்சியா் பாரதிவளவன் உள்பட பலா் பங்கேற்றனா்.




Leave a Reply

%d bloggers like this: