உலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை

உலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை.


50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் நடக்கிறது. நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை (WAGs) ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

அவர்கள் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

20 நாட்களுக்குப்பின் அழைத்துச் செல்லலாம். ஆனால், வீரர்கள் செல்லும் பஸ்சில் இணைந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: