மார்ச் 10 ஆம் தேதி உணவுப்பொருள் வழங்கல் குறைதீர்ப்பு முகாம்.

நமது பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதம் 10ஆம் தேதி உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

நேற்று புதன்கிழமை  பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறஉள்ளது. அதில் பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ச. மனோகரன் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் வட்டம் அலங்கிழி கிராமத்திலும்.  அதே போல வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் (தெற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாத்காப்பு அலுவலர் (பொ) எல். விஜயலெஷ்மி அவர்களும், குன்னம் வட்டம், துங்கபுரம் (வ) கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எல். இருதயமேரி அவர்களும், ஆலத்தூர் வட்டத்தின் கொட்டரை கிராமத்தில் பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் த. பாண்டித்துரை ஆகியோரது தலைமையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

 
Leave a Reply

%d bloggers like this: