உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து நிறைந்த கறிவேப்பிலை.

உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து நிறைந்த கறிவேப்பிலை.


நமது சமையலில் முக்கிய இடம்பிடிப்பது கறிவேப்பிலை. ஆனால் நாம் அதன் அருமை தெரியாமல் கறிவேப்பிலையை ஒதுக்குகின்றோம். இப்பொழுது ஏன் கறிவேப்பிலையில் என்னென்ன ஆரோக்கிய நன்மை உண்டு என்பதை பார்ப்போம்.
கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி,  சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது.
கறிவேப்பிலையில் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ குறைபாட்டால் உங்களுக்கு மாலைக்கண் நோய், கண் உறுத்தல் போன்ற பிரச்சினை ஏற்படும்.
கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில்  ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். எனவே தினம் 10  கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
தினமும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது. மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலை உண்ணும்பொழுது உங்களின் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.
கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக  மிக முக்கியம்.
கறிவேப்பிலையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் ஒளிரும்  சருமம் கிடைக்கும்.
கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.

42total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: