விளையாட்டுகளில் சாதனை படைக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் கலெக்டர் பேச்சு.

விளையாட்டுகளில் சாதனை படைக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் கலெக்டர் பேச்சு.

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இதன்மூலம் இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும், இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்க்கவும், கிராமங்களில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply

%d bloggers like this: