ஈரானின் மழை வெள்ளத்திற்கு இதவரை 70 பேர் பலி!

ஈரானின் மழை வெள்ளத்திற்கு இதவரை 70 பேர் பலி!


ஈரான் நாட்டில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் வெள்ளத்தில் 15 மாகாணங்களில் 2,199 சாலைகள், 84 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் 12 ஆயிரம் கி.மீ தொலைவு சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் நாட்டின் 35 சதவீத தொலை தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 86 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளதாக ஈரான் ஊரக மந்திரி அப்துல்ரேஸா ரெஹ்மானி ஃபாஸ்லி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறுமாறும் ஆண்கள் மற்றும் இளைஞர்களிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநரான கோலாமிராஸா ஷரியாத்தி தெரிவித்தார்.

கடந்த 19 நாட்களாக அங்கு பெய்துவரும் கன மழையினால் இதுவரை 791 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நேரம்.காம்

14total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: