ஈதுல் பித்ர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ரமலான் பெருநாள்

Hits: 4

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ரமலான் பெருநாள்.

இந்தியாவில் இன்று ஈதுல் பித்ர் என்னும் ரமலான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முடிந்து சவ்வால் பிறை நேற்று தென்பட்டதை தொடர்ந்து இன்று ரமலான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பெருநாளைத் தொடர்ந்து சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

அதே போல பெரம்பலூர் மாவட்டத்திலும் ரமலான் பெருநாள் தொழுகை இன்று காலையில் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் பங்கெடுத்து தங்களது சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள்.

பெரம்பலூர், வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், முஹம்மது பட்டினம், விசுவக்குடி, அரும்பாவூர் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பெருநாள் திடல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்

பெரம்பலூர் மெளலானா பள்ளி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் சுமார் 800க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். சிறப்பு தொழுகை காலை 7 மணிக்கு நடைபெற்றது.

அதே போல வி.களத்தூர் பெரிய பள்ளிவாசலிலும் மில்லத் நகர் ஈத்கா மைதானத்திலும், தவ்ஹீத் மர்கஸ் மைதானத்திலும் சிறப்பு தொழுகையுடன் சிறப்பு குத்பா என்னும் சிறப்பு பிரசங்கமும் நடைபெற்றது. லப்பைக்குடிக்காடு மேற்கு மற்றும் கிழக்கு ஜும்மா பள்ளிவாசல்களில் ரமலான் பெருநாள் தொழுகை நடைபெற்றது. வாலிகண்டபுரத்திலுள்ள பள்ளிவாசலிலும் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அரும்பாவூர், முஹம்மது பட்டினம், விசுவக்குடி, பூலாம்பாடி ஆகிய ஊர்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனையும் அதைத் தொடர்ந்து சிறப்பு குத்பாவும் நடைபெற்றது.

தமிழக அரசியல் தலைவர்கள் ரமலான் பெருநாளுக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் ஈதுல் பிதுர் என்னும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டோ ஆல்பம்
Leave a Reply