ஈகை பெருநாள் வாழ்த்து கவிதை

ஈகை பெருநாள்

இது புனிதமிகு – நன்னாள்
புகழ்மிக்க திருநாள்,
எங்கள் – ஈகை பெருநாள்
வாழ்வு மலரட்டும்
வசந்தம் பெருகட்டும்
அன்பு தலைக்கட்டும்
மனித நேயம் நிலைக்கட்டும்

சாதிமத – பேதமின்றி
சந்தோஷ உறவுகளாக
இவ்வுலகில்
வாழ்ந்திடுவோம்
நற் பண்பினை
பேணிடுவோம்

ஒற்றுமையின் – கயிற்றினை
ஒருமித்த குரலோடு – பற்றி
பிடித்திடுவோம் – நம் பாசத்தினை
காட்டிடுவோம்
வசந்தம் பிறக்கட்டும்
நம்-வாழ்வு செழிக்கட்டும்

ஒரு கூட்டுத் – தேனீக்களாய்
நம் – வாழ்வு
ஒன்றுபட்டு இணைந்து
வாழ – இறைவன்
நம்மீது அருள்
புரியட்டும்
வாழ்க்கை
வாழ்வதற்கே!

மனித நேயத்தை
இந்நாளில்
நிலை நிறுத்த
உறுதி கொண்டிடுவோம்!!

கூத்தாநல்லூர்
கு.சே. அமீர் ஹம்ஸா
துபை

 
Leave a Reply

%d bloggers like this: