இ-பதிவு முறை

இ-பதிவு முறை நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனை

392

இ-பதிவு முறை நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனை

இ-பதிவு முறை நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு சான்று இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

இ-பதிவு முறை

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களில் உள்ளே, வெளியே அவசர பயணத்துக்கு இ-பதிவு முறை கட்டாயம் என்றும், நேற்று முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வருவதாகவும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்தது.

இதில் திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், மாவட்டத்திற்கு உள்ளேயும் சென்று வருபவர்கள் இ-பதிவு பெற்றுள்ளார்களா? என்பதை சோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தீவிர கண்காணிப்பு

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து அவர்களிடம் இ-பதிவு சான்று உள்ளதா என்று ஆய்வு செய்து, பின்னர் அனுமதித்தனர். சான்று இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

மங்களமேடு

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் மங்களமேடு அருேக அகரம்சீகூர் மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை இணைக்கும் வெள்ளாற்று பாலத்தின் அருகில் மங்களமேடு போலீசார் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் அந்த வழியாக வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் விசாரித்து, இ- பதிவு சான்று இருந்தால் மட்டும் மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். இ-பதிவு சான்று இல்லாதவர்களை தகுந்த அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும் திருமாந்துறை மற்றும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தை இணைக்கும் தொழுதூர் அணைக்கட்டு வெள்ளாறு பாலம் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: