அமீரகத்தில் இஸ்லாமிய புத்தாண்டு (முஹர்ரம்) விடுமுறை அறிவிப்பு.

அமீரகத்தில் இஸ்லாமிய புத்தாண்டு (முஹர்ரம்) விடுமுறை அறிவிப்பு.

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமிய புத்தாண்டுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரும் முஹர்ரம் முதல் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அமீரக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையானது இந்த (ஆகஸ்ட்) மாதம் 31 அல்லது செப்டம்பர் முதல் தேதியில் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் செப்டம்பர் 1 அன்று பிறை தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் செப்டம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையால் அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வளைகுடா செய்திகளுக்கு.. http://www.gcctamilnews.com


Leave a Reply

%d bloggers like this: