புதிய செய்தி :

இஸ்லாமிய அழைப்பாளர்கள் (பாகம் 8)

இஸ்லாமிய அழைப்பாளர்கள் (பாகம் 8)

சேக் ஹூசைன் இ அவர்கள் 1950 ஆம் ஆண்டு மலேசியாவில் சீன வம்சாவளியைச் சார்ந்த பௌத்தகுடும்பத்தில் பிறந்தார். தமது சிறுபருவமுதலே இஸ்லாமிய நண்பர்களுடனும் இஸ்லாமிய குடும்பங்களுடன் பழகியதால் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் உன்னதமான கொள்கைகளைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக் கொண்டார்.

ஐநேர தொழுகையும், அதற்காக ஒன்று கூடி தொழுவதும் பின்பு பிரிவதும், ஏழை எளியவர்களுக்கு உதவச்சொல்லும் இஸ்லாமிய மாண்பையும் தமது சிறு வயது முதலே கண்டு வளர்ந்ததால் 1968 ஆம் வருடம் தம்மை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். அதாவது தமது 18ஆம் வயதில் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவினார்.

பிறகு ஹூசைன் அவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள மதினா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து ஹதீஸ்களில் நிபுணத்துவம் பெற்றார். அதேபோல் ஹதீஸ் ஆய்வு செய்வதில் பெரும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் நசீருத்தீன் அல் அல்பானி அவர்களிடமும் ஹதீஸ்களை பற்றி கற்றுக் கொண்டார்.

1978 ஆம் ஆண்டு தம் பட்டப் படிப்பிற்கு பிறகு, மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பொதுநல அமைப்பான ‘பெர்கின்’, ல் இணைந்தார். இவ்வமைப்பானது புதிதாக இஸ்லாத்தின்பால் இணைந்த சகோதர சகோதரிகளுக்காக இஸ்லாத்தை பற்றிஎடுத்துக் கூறவும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு அவர் ஹாங்காங்கில் உள்ள இஸ்லாமிய மையத்தின் இயக்குநராக இருந்தார். இஸ்லாமிய சமூக நல்வாழ்வு மற்றும் தாஃவா வேலைகளில் இருந்த அவரது பரந்த அனுபவத்தால் 1984 இல் தன்னார்வலர்களுடன் ‘அல் காதிம்’ என்ற அமைப்பை நிறுவினார். 2015 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா இஸ்லாமிய சமாதான மாநாட்டில் சேக் ஹூசைன் அவர்கள்இஸ்லாம் குறித்து சிறப்புரையாற்றினார். இம் மாநாட்டில் யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

உஸ்தாத் முகமது ஹூசைன் யீ இஸ்லாமிய உலகில் நன்கு அறியப்பட்ட தனித்தன்மை மிக்கவராகதிகழ்கிறார். உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அழைப்பின் மூலம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில்கோடைக்கால முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

60 வயதைக் கடந்தும் கண்டம் விட்டு கண்டம் சென்று தமது அழைப்பு பணியை தொடர்ந்துசெய்துவருகிறார். எளிமையான பரப்புரையின் மூலம் அகிலமெங்கும் ஆங்கில மொழியில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அள்ளி அள்ளி வழங்கும் இவரின் அழைப்பு பணி தொடர்ந்து சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமின்…

முந்தைய அழைப்பாளர்களின் விபரங்கள் காண கீழுள்ள லிங்கில் பார்க்கலாம்.

Dalia Mogahed Biography in Tamil https://www.youtube.com/watch?v=isG-P…

Sheik khalid Yasin Biography in Tamil https://www.youtube.com/watch?v=Mw8No

Sheik Yusuf Estes Biography in Tamil https://www.youtube.com/watch?v=Up3QT

Dr. Bilal Philips Biography in Tamil https://www.youtube.com/watch?v=lnBE8

Nouman Ali Khan Biography in Tamil below link https://www.youtube.com/watch?v=7PsPh

Mufthi Ismail Moosa Biography Tamil below link https://www.youtube.com/watch?v=zotnC

Dr. Zakir Naik Biography in Tamil below link https://www.youtube.com/watch?v=sDwhC
Leave a Reply