நம்ம நாட்டுல மட்டும் இவ்ளோ கட்சியா?

நம்ம நாட்டுல மட்டும் இவ்ளோ கட்சியா?


பெரும்பாலான வெளிநாடுகளில் இரண்டு கட்சிகளே இருக்கும். அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும். எனவே தேர்தலின்போது மக்கள் குழப்பமின்றி வாக்களித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இஞ்சினியரிங் கல்லூரி போல் ஒவ்வொரு வருடமும் புதுப்புது கட்சிகள் உருவாகி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தில் இதுவரை மொத்தம் 2293 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். எண்ணிக்கையை கேட்கும்போதே அதிர்ச்சியாக இருக்கின்றது அல்லவா?

அதேபோல் தமிழகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 15 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளது. தமிழ்நாடு இளைஞர் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா முன்னேற்ற கழகம், தமிழ் தெலுங்கு கட்சி, மக்கள் முன்னேற்ற செயல் கட்சி, மக்கள் மசோதா கட்சி, ஊழல் எதிர்ப்பு இயக்க கட்சி, தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம், ஸ்வதந்திரா கட்சி, அனைத்திந்திய மக்கள் கட்சி, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம், நியூ ஜெனரேசன் கட்சி, ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆகும்.

ஒவ்வொரு தேர்தலின்போது தமிழகத்தில் மட்டும் சுமார் 10 கட்சிகள் உருவாகி வருவதாகவும், இதற்கேற்றவாறு தேர்தல் ஆணையமும் புதுப்புது சின்னங்களை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சி ஆரம்பிக்க ஒரு கட்டுப்பாடு உருவாக்க வேண்டும் என்றும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற நிலை உள்ளதால் எதிர்காலத்தில் லட்சக்கணக்கில் கட்சிகள் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

23total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: