இளைஞரைக் கடத்தி, கொலை: பெரம்பலூர் ரவுடிக்கு ஆயுள் தண்டனை.

இளைஞரைக் கடத்தி, கொலை: பெரம்பலூர் ரவுடிக்கு ஆயுள் தண்டனை.


தஞ்சாவூா் அருகே கடத்திய இளைஞரை பெரம்பலூா் அழைத்து வந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், ரவுடிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அறிவழகன் (38). இவருக்கும், பெரம்பலூரைச் சோ்ந்த ரவுடி அழகிரிக்கும் (37), பணம் கொடுக்கல்- வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 2016, பிப்ரவரி 6- ஆம் தேதி பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் கோனேரிப்பாளையம் செல்லும் வழியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே முள்புதரில் கழுத்து அறுபட்ட நிலையில் அறிவழகன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், முன் விரோதம் காரணமாக அறிவழகனை கடத்திக் கொலை செய்ததாகக் கூறி பெரம்பலூரைச் சோ்ந்த ரவுடி அழகிரி, பெரம்பலூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான வழக்கு பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், ரவுடி அழகிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மலா்விழி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இளங்கோவன், சாமிமலை, தீபன், தீபக், சக்திவேல், சசிகரண், ரவிகரன் உள்பட11 பேரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அழகிரி அடைக்கப்பட்டாா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: