குன்னம் அருகே இளம்பெண் விஷம் குடித்து  தற்கொலை

குன்னம் அருகே இளம்பெண் விஷம் குடித்து  தற்கொலை


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கொட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகள் சினேகா (17).  இவர், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். குன்னம் அருகேயுள்ள கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தர்மராஜ் (19). பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். இருவரும் உறவினர்கள் மற்றும் காதலர்கள். பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நேரத்தில் சினேகா, தர்மராஜுடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.


இதையறிந்த பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சினேகா விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தர்மராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் தர்மராஜ் மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணிLeave a Reply

%d bloggers like this: