தற்கொலை

உடையார்பாளையம் அருகே இளம்பெண் தற்கொலை.

உடையார்பாளையம் அருகே இளம்பெண் தற்கொலை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

உடையார்பாளையம் அருகேயுள்ள பிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள் சபிதா(23). இவர் தத்தனூரில் உள்ள ஒரு நூலகத்தில் உதவியாளரக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை தந்தை – மகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதில் சபிதாவை பால்ராஜ் தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த சபிதா பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபிதா, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி


அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: