இலைப்புழுவை கட்டுப்படுத்த

தென்னையில் இலைப்புழுவை கட்டுப்படுத்த யோசனை

548

தென்னையில் இலைப்புழுவை கட்டுப்படுத்த யோசனை

தென்னை மரத்தில் இலைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன், தொழில்நுட்ப வல்லுநா் பி. தொமினிக் மனோஜ் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்னை மரத்தில் கருந்தலைப்புழு அல்லது பச்சையம் தின்னும் இப்புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. ஆண்டு முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைக்காலங்களில் அதிகளவில் காணப்படுகிறது. இப்போது, இப் புழுக்களின் தாக்குதல் பெரம்பலூா் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தென்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த சாதாரண மற்றும் உழவியல் முறைகளில் தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டியெடுத்து அழித்து விட வேண்டும். குறிப்பாக, கோடை காலம் தொடங்கும் முன் செய்வது நன்று.

ரசாயன முறையில் மாலத்தியான் 50 இ.சி, 0.05 சதவீதம் அல்லது பாஸலோன் 0.05 சதவீதம் (1 மி.லி.லி) ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு தெளிக்கவும்.

உயிரியல் முறையில், மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சாா்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.

இந்த ஒட்டுண்ணிகள் கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலுள்ள பூச்சியியல் துறையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால் தென்னையை தாக்கும் இலைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.




%d bloggers like this: