புதிய செய்தி :

பெரம்பலூரில் இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூரில் இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், மே 21 ஆம் தேதி முதல் பெண்களுக்கான இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் மே 21 ஆம் தேதி முதல் ஆரி வேலைப்பாடு குறித்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு முடித்தவராகவும்,  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.தொடர்ந்து 30 நாள்களுக்கு நடைபெறும் இப்பயிற்சியின்போது காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படும்.

மேலும் படிக்க தினமணி
Leave a Reply