இலங்கையில் இரண்டு தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

Hits: 0

இலங்கையில் இரண்டு தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.


இலங்கையில் இரண்டு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனை நடந்தபோது குண்டு வெடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம் ஒன்றிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் முதற்கட்டமாக 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

%d bloggers like this: