இரு வேடங்களில் ஆண்ட்ரியா நடிக்கும் “மாளிகை”

இரு வேடங்களில் ஆண்ட்ரியா நடிக்கும் “மாளிகை”

நடிகை ஆண்ட்ரியா இரண்டு வேடங்களில் நடிக்கும் முதல் படம் “மாளிகை”. காவல்துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தை தில் சத்யா இயக்கியுள்ளார். சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில் பேசிய ஆன்ட்ரியா “இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. எனக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருப்பதால் தமிழில் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கூறியதால் தமிழில் எடுக்கப்பட்டதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி என்றார். நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

படத்தின் இயக்குநர் தில்சத்யா, தமிழில் தனக்கு இது முதல் படமென்றும்.  இந்தப்படத்தை இயக்கியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார். அதே போல கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படமாக இந்த படம் இருக்கும்” என்றார்.

திரில்லர் படத்தை தியேட்டரில் பார்ப்போம்.

71total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: