வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழப்பு.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம் மனைவி தமிழரசி (45). மனநலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், அவரது தந்தை ஊரான டி.களத்தூா் கிராமத்தில் வசித்து வந்தாா். இந்நிலையில், அந்த கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த பாடாலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விஷம் குடித்து முதியவா் சாவு: ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் நடராஜன் (60). கடந்த சில நாள்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தாா்.
இதையறிந்த அவரது உறவினா்கள் பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Keywords: இருவா் உயிரிழப்பு
You must log in to post a comment.