சிங்கப்பூர் வியாபாரிகள் விரும்பும் இயற்கை காய்கறிகள்.

Hits: 0

சிங்கப்பூர் வியாபாரிகள் விரும்பும் இயற்கை காய்கறிகள்.


தமிழகத்தில் விளையும் இயற்கை காய்கறிகளை, வெளிநாட்டினர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நிலத்தடி நீரைக் கொண்டு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. அவற்றில் கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கும்.

இங்குள்ள விவசாயிகள் பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி காய்கறிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த இயற்கை காய்கறிகளுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மவுசு உள்ளது.

வெளிநாட்டு வியாபாரிகள் காய்கறிகள் உற்பத்தியாகும் தோட்டத்திற்கு வந்து, தரம் பார்த்து, வாகனம் வைத்து எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்துச் செலவு மிச்சமாகிறது.
Leave a Reply