பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பக்ரீத் பெருநாள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பக்ரீத் பெருநாள்.

பெரம்லூர் மாவட்டத்தில் இன்று பக்ரீத் பெருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்தியாவில் இன்று இஸ்லாமியர்களின் புனித தினமான தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த புனித தினத்தை பெரம்பலூர் மாவட்டத்திலும்  சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இந்த புனித தினத்தின் சிறப்பு தொழுகை காலையில் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் பங்கெடுத்து சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள்.  பெரம்பலூர், வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், முஹம்மது பட்டினம், விசுவக்குடி, அரும்பாவூர் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பெருநாள் திடல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பெரம்பலூரில் நடைபெற்ற தொழுகையில் சுமார் 750 க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர்.  அதே போல் வி.களத்தூர் பெரிய பள்ளிவாசலிலும் மில்லத் நகர் ஈத்கா மைதானத்திலும், தவ்ஹீத் மர்கஸ் மைதானத்திலும் சிறப்பு தொழுகையுடன் குத்பா என்னும் சிறப்பு பிரசங்கமும் நடைபெற்றது.

லப்பைக்குடிக்காடு மேற்கு மற்றும் கிழக்கு ஜும்மா பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா நடைபெற்றது. லப்பைக்குடிக்காடு தாருஸ் ஸலாம் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மைதானத்தில் சிறப்பு தொழுகையும் குத்பாவும் நடைபெற்றது.

வாலிகண்டபுரம் பள்ளிவாசலிலும் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையும் குத்பாவும் நடைபெற்றது. அரும்பாவூர், முஹம்மது பட்டினம், விசுவக்குடி, பூலாம்பாடி ஆகிய ஊர்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனையும் அதைத் தொடர்ந்து குத்பாவும் நடைபெற்றது.

கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் ஈதுல் அத்ஹா என்னும் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

%d bloggers like this: