இனிமே வாட்சப் குருப்பில் எப்படி சேர்ப்பீங்க?

இனிமே வாட்சப் குருப்பில் எப்படி சேர்ப்பீங்க? அனுமதி இல்லாமல் யாரையும் வாட்சப் குரூப்பில் இணைக்க முடியாது.


யாருன்னே தெரியாதவன்லாம் நம்மள இந்த வாட்சப் குருப்பில் சேர்த்துவிட்டு கொலையா கொல்லுவானுங்க. இனிமே அப்படியெல்லாம் பண்ண முடியாதாம். பர்ஸ் பர்மிஷன் நெக்ஸ்ட்தான் குருப் மெம்பர். அதை எப்படி செய்றதுங்கிற விபரம்:

வாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இணைக்க முடியாதவகையில் அந்நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்சப் செயலி உலகமுழுவதும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் பயன்படுத்து மெசஞ்சராக வலம்வந்து கொண்டிருக்கின்றது.

இது வரை இந்த ஆப்பில் குரூப்புகளில் ஒருவரை இணைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. எனவே பலரது அனுமதியில்லமல் தவறான முறையில் குரூப்பகளில் இணைப்பது குறித்து பல புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் கொண்டு வந்துள்ள அப்டேட்டில், ஒருவரின் அனுமதியில்லாமல் அவரை குழுவில் இணைக்க இயலாது.

அதற்கு பயனாளர்கள் தங்களின் ஸ்மார்ட் போனில் account – privacy- groups- அதில் “nobody” “my contacts” “every one” இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் அதன்படி உங்கள் account active-ல் இருக்கும்.

மேலும் தெரியாத நபர் உங்களை குரூப்பில் இணைக்க முற்பட்டால் அதற்கான அனுமதி கோரி மூன்றுநாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

53total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: