இந்த உணவுகள் சூடு செய்து சாப்பிட உகந்தவை அல்ல.

383

[the_ad id=”7250″]

இந்த உணவுகள் சூடு செய்து சாப்பிட உகந்தவை அல்ல.

சில உணவுகள் மீண்டும், மீண்டும் சூடு செய்வதால் விஷத்தன்மையை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

எவ்வளவுதான் குறைவாகச் செய்தாலும் சில நேரங்களில் உணவு மீந்து விடுகிறது. அதை வீணாக்க நமக்கு மனது வருவதில்லை, உணவுகளை வீணாக்குவது தவறும் கூட. இதனால் நாம் மீந்து போன உணவுகளை எடுத்து வைத்து அதை மீண்டும் சூடாக்கிச் சாப்பிடுவது பேச்சுலர், மிடில் கிளாஸ் குடும்பங்களின் பழக்கம்.  மீதமுள்ள உணவை எடுத்து வைத்துச் சாப்பிடக்கூடாதா என்றால் சாப்பிடலாம். ஆனால் குறிப்பிட்ட சில உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

[quote]உங்களுக்குக் கரும்புச் சாறு குடிக்கப் பிடிக்குமா?[/quote]

[quote]காலை உணவில் கவனம் தேவை.[/quote]

[the_ad id=”7251″]

கீழுள்ள உணவுகளை மீண்டும் சூடு செய்வதை தவிர்க்கவும்:
எண்ணெய் :

ஆளிவிதை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கும். அவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் வகையில் வெப்ப நிலைக்கு உகந்ததல்ல. எனவே அவற்றைச் சமைக்கும்போதும் சேர்த்துக்கொள்வது தவறு. அவற்றை அப்படியே உணவில், சாலட் வகைகளில் கலந்து சாப்பிடுவதுதான் சிறந்தது.

சோறு :

உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

முட்டை :

புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும். எனவே முட்டையைச் சமைத்தவுடனே சாப்பிட்டு விடவும் அல்லது நீண்ட நேரத்திற்குப் பிறகு சாப்பிட்டாலும் சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுங்கள்.

[the_ad id=”7251″]

கோழி கறி :

கோழியை எப்படிச் சமைத்தாலும் சுவையாக இருக்கும். அதற்காக மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்திச் சாப்பிட்டால் நிச்சயம் அது கோழி அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் அதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும். அதேபோல் கோழியை அதிகளவிலான தீயில் சமைப்பதும் தவறு.

காய்கறிகள் :

நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகள், அதாவது கீரை வகைகள், கேரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தும் போது அதன் தண்மை மாறும். குறிப்பாகக் கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும்.

கிழங்கு வகைகள் :

உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாகச் சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், உயிர்ச்சத்து C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

[the_ad id=”7251″]

காளான் :

காளன் சமைத்ததும் சுடச் சுட சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் மினரல் சத்துகள் ஆபத்தாக மாறும். அசீரணத்தை உண்டாக்கும். மேலும் அதில் உள்ள நைட்ரஜன் விஷமாக மாறும்.

[quote]குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…[/quote]

[quote]உடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்.[/quote]

எமக்குத் தெரிந்த காலம் தொட்டு இப்படித்தான் நாங்கள் சாப்பிடுகிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உடல் உழைப்புடன் கூடிய பணிகள் செய்வதால் எதைத் திண்டாலும் செறித்துவிடும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை அப்படியில்லையே. இன்றைய வாழ்க்கை முறைக்குத் தகுந்தவாறு சிலவற்றை தவிர்ப்பது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஹெல்த் சம்மந்தமான பதிவுகளுக்கு.


[the_ad id=”7252″]


[the_ad id=”7250″]


[the_ad id=”7332″]
%d bloggers like this: